வல்லைவெளியில் ஆரம்பமானது 3 ஆம் நாள் ஊர்தி வழி கையெழுத்து போராட்டம்


பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்க கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்து போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், மாவட்டபுரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (12) வல்லை வெளி முனீஸ்வரர் ஆலயம் முன்பாக தேங்காய் உடைத்து ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியும்,  சர்வஜன நீதி அமைப்பும் இணைந்து  காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரை இந்த போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.

கையெழுத்து போராட்ட ஊர்தி தற்போது நெல்லியடி நகரில் கையெழுத்து போராட்டங்களை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஊர்த்தி பருத்தித்துறை மருதங்கேணி ஊடாக பயணிக்கவுள்ளது.

யாழில் சுமந்திரனின் ஆதரவாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலமையில் கையெழுத்து போராட்டம் நடைபெறுகிறது.


No comments