5ஆம் நாள் திலீபன் ஊர்தி நினைவேந்தல் முன்னெடுப்பு

தியாகி திலீபனின் 35வது நினைவு நிகழ்வுகளின் தாங்கிய ஊர்தி பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு

மற்றும் விசுவமடு பகுதியில் இன்றைய தினம் வந்தடைந்தது.

மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்ட நிலையில், மக்கள் தமது உணர்வு பூர்வமான அஞ்சலியினை செலுத்தினர்.

பின்னர் மீண்டும் முள்ளியவளை நெடுங்கேணி ஒட்டுசுட்டான் ஊடாக வவுனியா சென்று வவுனியாவில் இருந்து மன்னார் மற்றும் கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் வரை சென்றடைய உள்ளது.

இவ்வூர்தியில் தியாகி திலீபன் அவர்களின் திருஉருவ தாங்கிய நினைவு ஊர்தி மக்களின் அஞ்சலிக்காக வீதிகளில் நிறுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நினைவேந்தல் ஏற்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டு வருகிறது.


No comments