கோத்தா வந்தாலும் முட்டை பிரச்சினை தீரவில்லை!

பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதியில் இறங்கியிருந்த நிலையில் தப்பியோடி கோத்தபாய இரவோடு இரவாக இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளார்.

ஆனாலும் மக்களது வாழ்விலயல் தொடர்ந்தும் மோசமடைந்தே செல்கின்றது.

கோதுமை, மா, பாண் என தட்டுப்பாடுகள் பூதகராமகியுள்ளது.

இந்நிலையில் கோழிப்பண்ணைகளுக்கு வருகை தரும் மொத்த வியாபாரிகளுக்கு ஒரு முட்டையை ரூ.46/-க்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரங்களில் முட்டை விற்பனை குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட வர்த்தமானியில் திருத்தம் செய்யப்படும் வரை முட்டை உற்பத்தியாளர்களுக்கான சலுகைகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




No comments