குருந்தூர்மலையில் பௌத்தத்திற்கு முட்டுக்கட்டையாம்!

 


முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சிலர் இடையூறாக இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் குருந்தூர் மலையில் இருக்கின்ற  பௌத்த பிக்குகள் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.

 ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள தொல்லியல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில்  பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சிலர் இடையூறாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த சில தினங்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் நேற்று (02) முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலத்தை பெற்றுக் கொள்ள வருகைதருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். 

இதன்படி முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் கந்தையா சிவநேசன் மற்றும்  சமூக செயற்பாட்டாளர் யூட் நிக்சன்  ஆகியோர்  பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்த நிலையில் அவர்களிடம் மிக நீண்டநேரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வாக்குமூலம் பெற்று கையொப்பம் வாங்கி கொண்டுள்ளனர்.No comments