பாண் 300 ரூபா:தொலைபேசி கட்டணம் 20 வீதம்?ஒரு இறாத்தல் (450G) பாணின் விலையை 300 ரூபாயாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இறக்குமதி செய்யப்படும் 50 கிலோகிராம் கோதுமை மா மூடையின் விலை 20,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டமையே, இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவிக்கின்றார் 

இதனிடையே தொலைபேசி கட்டணம், தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் இணைய சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு  அறிவித்துள்ளது.

இந்த கட்டண திருத்தம் செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

நிலையான தொலைபேசிகள், கையடக்கத் தொலைபேசிகள், இணைய சேவைகளுக்கான கட்டணங்கள் 20% அதிகரிக்கப்படும்.

செய்திமதி தொழில்நுட்ப தொலைகாட்சி சேவைகள் மற்றும் கேபல் தொலைகாட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் 25% அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

No comments