பக்கிங்ஹாம் அரண்மனையில் சாள்ஸ் - ரணில்!


இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்குபற்றியதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த வார இறுதியில் அரச வைபவத்தின் போது மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்தார். 

மூன்றாம் சார்லஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிநேகபூர்வ உரையாடல் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் மறைந்த மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவுக்குச் சென்று, செப்டம்பர் 18ஆம் திகதி பக்கிங்ஹாம் அரண்மனையில் மூன்றாம் சார்லஸை சந்தித்தனர்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மையில் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அவர்களுடன் சில முக்கிய நபர்கள் மாத்திரமே சென்றிருந்ததாக ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க, திருமதி விக்கிரமசிங்க, விசேட உதவியாளர், மூன்று பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஆகியோர் மாத்திரமே இந்த சுற்றுப்பயண விருந்தில் இருந்ததாக பேச்சாளர் தெரிவித்தார்.

No comments