பிரித்தானியாவில் புலம்பெயர் இலங்கையர்கள் - ரணில் சந்திப்பு!!

பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.

நாட்டில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக ஒன்றிணையுமாறு அவர்களுக்கு இதன்போது ஜனாதிபதி அழைப்பு விடுத்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய மகாராணி மறைந்த 2 ஆம் எலிசபெத்தின், இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து பயணம் செய்தார்.

மகாராணியின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் தலைமையிலான குழுவினர் புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments