திலீபம்:கொச்சைப்டுத்தாதீர்கள்!

 


தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகின்ற அணிகளின் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது என  சமூக மேம்பாட்டு இணையக் காப்பாளர் துரைராசா சுஜிந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குற்றச்சாட்டினார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்காக செயற்படுபவர்களாக கூறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு அணிகள் தமிழ் மக்களின் தியாகம் செய்த திலீபனின் நினைவு தினத்தில் மிகவும் அருவருக்கதக்க முறையில் செய்யப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறானவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டு தங்களுடைய சுயலாபங்களுக்காக இவ்வாறு செயல்படுகிறார்கள் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ப்பதாக கூறுபவர்கள் தற்போது ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

தியாக தீபத்தின் தியாகத்தை மதிக்காதவர்கள் அரசியலுக்கு தேவை இல்லை அவர்கள் தொடர்பில் புலம்பெயர் சமூகங்களும் கவனம் எடுத்து செயல்பட வேண்டும் - என்றார்

சமூக மேம்பாட்டுக்கான இணையத்தின் செயற்பாட்டாளர்களான ரா.உதயகுமார், த.றொஹிந்தன் ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments