8 இந்திய மீனவர்கள் கைது


இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடல் தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு விசைப்படகுடன் காரைநகர் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தவுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை கடல் தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


No comments