ஆஸ்ரேலியாவில் கரையொதுங்கிய திமிலங்கள்: உயிரிழந்தன 200 திமிங்கிலங்கள்!


ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவின் மேற்கு  கடற்கரையில் கரை ஒதுங்கிய 200 பைலட் இன திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

நேற்று டாஸ்மானியாவின் ஓஷன் கடற்கரையில் 235 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஒவ்வொன்றும் சுமார் 2,500 கிலோ எடையுள்ளதால் அவற்றை தூக்கிச்சென்று கடலில் மிதக்க வைப்பது பெரும் சவாலாக இருந்தது.

200 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் எஞ்சியுள்ள 35 திமிங்கலங்களை மீட்பு குழுவினர் சிரமப்பட்டு கடலுக்குள் தள்ளி பின் படகுகளுடன் இணைத்து ஆழ்கடலுக்கு சென்று அவற்றை விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


No comments