ரூ.4.7 பில்லியன்:இலங்கையில் சிறைக்கைதிகளிற்கு தேவையாம்!இலங்கை சிறைச்சாலைகள் நெரிசல் காரணமாக சிறைச்சாலைகளை பராமரிப்பதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து 30 சிறைகளிலும் ஒரே நேரத்தில் 13,200 கைதிகளை அடைக்கக்கூடியவை, ஆனால் தற்போது 24,000 கைதிகள் இந்த வளாகங்களில் இருப்பதாகவும், இது கிட்டத்தட்ட 180% அதிகமாகும். அதன்படி, 2022 – 2023 ஆம் ஆண்டு உணவு வழங்குவதற்கு அரசாங்கம் ரூ.4.7 பில்லியன் செலவழிக்க வேண்டும். 24,000 கைதிகளில் 15,000 பேர் சந்தேகத்திற்குரியவர்கள் மற்றும் அவர்களில் 50% பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சில சிறைச்சாலைகளில் கூட்டம் ஏறக்குறைய 200% அதிகரித்துள்ளதாக ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments