கோத்தாவிற்கு காற்றடிக்க முயற்சி! கோத்தபாயவிற்கு உற்றசாகமூட்டி மீண்டும் அரசியலிற்குள் இறக்க பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் முற்பட்டுள்ளனர்.அவர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திப்பதற்கு அதிக நேரம் ஒதுக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தினமும் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து வருகின்றனர்.

கோத்தபாய ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்க முயற்சித்த போதிலும் அவரை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்துவதே இவர்களின் நோக்கமாக உள்ளதாகவும் அறிய முடிகிறது.

அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் சாத்தியமாகவுள்ளதாலேயே கோத்தபாயவை முன்னிறுத்தி கட்சியை வளர்த்துக்கொள்ள அவர்கள் முற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments