விளக்கேற்ற குழு அமைப்பு!

இம்முறை திலீபனின் நினைவேந்தல் நிகழ்வானது மக்களின் எழுச்சியாக மக்களின் புரட்சியாக முன்னாள் முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றோம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

இன்றைய தினம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் தியாக தீபம் திலீபன் அவர்களுடைய நினைவேந்தலை  முன்னெடுக்கும்  முகமாக தமிழ் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று இணைந்து ஒற்றுமையாக இந்த நினைவேந்தலை ஒரு மக்கள் எழுச்சியாக புரட்சியாக முன்னெடுக்கும் விதமாக இன்றைய தினம் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில தியாக தீபம் நினைவேந்தலினை ஒழுங்கு செய்கின்ற ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது 15 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்

அந்த நிகழ்வினை முன்னெடுக்கின்ற பொது கட்டமைப்பதற்காக நாங்கள் தியாக தீபம்   திலீபனுடைய நினைவுகளில் எந்தவித முரண்பாடும் இன்றி யாரும் எந்தவித சுய லாபத்திற்கும் இதனை பயன்படுத்தாத விதத்திலே ஒட்டுமொத்த தமிழினமாக விடுதலைக்கான பயணமாக முன்னெடுப்பதற்காக நாங்கள் அனைத்து முயற்சிகளையும் இதய சுத்தி ஓடும் இலட்சியப்பற்றோடும் முன்னெடுக்க இருக்கின்றோம்

நினைவேந்தல் கட்டமைப்பிலே மதத் தலைவர்கள் பல்கலைக்கழக மாணவருடைய பிரதிநிதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய  பிரதிநிதிகள் மாவீரர்களினுடைய பெற்றோர்கள் முன்னாள் போராளிகள் அரசியல் கைதிகளினுடைய பிரதிநிதிகள் விஞ்ஞான ஆய்வு மன்றத்தினுடைய பிரதிநிதி போன்ற பலர் பொதுகட்டமைப்பிலே உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்

 

No comments