சிறையிலிருந்தவாறு மோட்டார் சைக்கிள் எரிப்பு?தென்னிலங்கை சிறைகளுள் உள்ள பாதாள உலக கும்பல் தலைவர்கள் வெளியே உள்ள எதிர்தரப்புக்களை போட்டுத்தள்ளுவது இலங்கையில் சாதாரணமானது.

அவ்வாறான குழுவொன்று கோத்தபாய மீதும் கண்வைக்க வெலிக்கடை சிறையினுள் வைத்தே அவர்கள் வேட்டையாடப்பட்டது பழைய செய்தியாகும்.

இந்நிலையில் சிறையினுள் இருந்தவாறே தனது மனைவியின் மோட்டார் சைக்கிளை ஆட்களை வைத்து தீயிட்ட தமிழ் கைதி தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கினை சேர்ந்த குறித்த கைதியின் மனைவி இலங்கை கடற்படை அதிகாரியொருவருடன் ஜக்கியமாகிய நிலையில் இதனை அறிந்த கணவர் சிறையிலிருந்தவாறே தனது ஆதரவாளர்களை வைத்து மனைவியிடமிருந்த மோட்டார் சைக்கிளை எரித்துள்ளார்.

இதனையடுத்து சிறைக்கு கடற்படை அதிகாரி சகிதம் வந்திறங்கிய கைதியின் மனைவி செய்த முறைப்பாட்டையடுத்து அவர் ஒரு மாதம் சிறையினுள் இருட்டறையினுள் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த கைதி பழிவாங்கும் வகையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சார்ந்த கட்சி குற்றச்சாட்டுககளை முன்வைத்துள்ளது.


No comments