வட்டுகோட்டைப் பகுதியில் 11 வாள்களுடன் இளைஞன் கைது!!


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 11 வாள்களுடன் 22  இளைஞன் ஒருவர் காவல்துறை சிறப்பு அதிரடி படையினர் கைது செய்யப்பட்டார்.

துணைவி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பல விதமான வடிவங்களில் செய்யப்பட்ட வாள்கள் காணப்படுவதாக காவல்துறை விசேட அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. 

இதையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அங்கு விரைந்த அதிரடி படையினர் ஆலயத்தினை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தினார்கள். 

அதன் போது  அங்கிருந்து பல வடிவங்களில் செய்யப்பட்ட 11 வாள்களை மீட்டனர். அத்துடன் 22 வயதான இளைஞனையும் கைது செய்தனர். பின்னர் அவர் வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதேவேளை குறித்த இளைஞனின் தந்தை குறித்த கோயிலின் பூசகர்கள் எனவும்,  வாள்களுடன் கலையடி, குறி சொல்பவர் எனவும், அதற்காக பயன்படுத்தும் வாள்களே அவை என இளைஞனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

No comments