தீலீபன் நினைவேந்தல் குண்டர்கள் தாக்குதல்:டாண் செய்தி!

யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் மற்றும் தனுஜனின் மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் குண்டர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்து தொலைக்காட்சியான டாண் செய்தி வெளியிட்டுள்ளது,

தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ள நிலையில் இன்று குறித்த நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளை முன்னெடுக்கநல்லூரில் உள்ள திலீபனின் நினைவு தூபி முதலில் சென்றபோது அங்கே ஏற்கனவே கொட்டகை அமைத்து காத்திருந்த முன்னணியின் குண்டர்களினால் திலீபனின் நினைவேந்தல் இடத்தில் உனக்கு நிற்பதற்கு உரிமை இல்லை எனக் கூறி யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் தனுஜன் மற்றும் பார்த்திபன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வேலன் சுவாமிகள் மற்றும்  குருமுதல்வர் உள்ளிட்ட பொது கட்டமைப்பினர் பிரசன்னத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே இன்றைய தினம் உண்ணா நோன்பு இருந்த மத குருமார் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முன்னணியினர் வாக்குவாதப்பட்டு முரண்பட்டு கொண்டமை குறிப்பிடத்தக்கது,

No comments