திலீபன் நினைவேந்தல் பருத்தித்துறை வீதி பூட்டு: ஏற்பாட்டுக்குழு அறிவிப்பு!



அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உன்னத இலட்சியத்திற்காய் உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள் யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவுத் தூபியடியில்; இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

நாளை தினமான திங்கட்கிழமை தூபி முன்பதாகவுள்ள பருத்தித்துறை வீதி மூடப்படுமென அறிவித்துள்ள நினைவேந்தல் ஏற்பாட்டு பொதுக்கட்டமைப்பு தலைவர் வேலன் சுவாமிகள் வர்த்தக நிலையங்களை காலை வேளை மூடி நினைவேந்தலில் பங்கெடுக்க வர்த்தகர்களிற்கும் அழைப்புவிடுத்துள்ளார்.

உன்னத இலட்சியத்திற்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுக்கும், கடந்தகால விடுதலைப் போராட்டத்தின் போது உயிர்நீத்த அனைத்து மாவீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் நாளை காலை அகவணக்கம் செலுத்தப்படவுள்ளது.

இதனிடையே யாழ்.பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பிரதேசங்களிலிருந்தும் வாகன ஊர்திகள் புறப்பட்டு நாளை நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியடிக்கு வந்து சேரவுள்ளன.

இதனிடையே தூபிக்கருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகையில் பதினொராவது நாளாகவும் திலீபனின் நினைவுகளைச் சுமந்து இன்று காலை-8 மணி முதல் மாலை-5 மணி வரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


No comments