ரணிலின் அமைச்சர்களது திறமைகள் வெளியானது!

ரணில் விக்ரமசிங்க   ராஜாங்க அமைச்சர்கள் சிலரின்  கடந்த கால சாதனைகளை அம்பலப்படுத்தியுள்ளார் சமூக செயற்பாட்டாளர் ஒருவர்

 ரஞ்சித் சியம்பலாபிட்டிய ; நிதி அமைச்சின்  முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின்  அனுமதியின்றி ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை  சட்டவிரோதமான முறையில் இலங்கை மின்சார சபையின் பணியாளர்களாக நியமித்து இருந்தார்  

  ஜகத் புஷ்பகுமார : இலங்கை தென்னை அபிவிருத்தி சபையில் நடைபெற்ற  50 மில்லியனுக்கும் அதிகமான மோசடியுடன் தொடர்புபட்டு இருந்தார் . 

 லசந்த அழகியவன்ன :சீனி இறக்குமதி  தொடர்பான வரி மூலம் 15.9 பில்லியன்  பெறுமதி நட்டம் அரச நிதிக்கு ஏற்பட காரணமாக இருந்தார் 

 திலும் அமுனுகம : 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள்  செலவில் இந்தியாவில் இருந்து 160 ரயில் பெட்டிகள் வாங்கியது தொடர்பான மோசடியுடன் தொடர்புபட்டு இருந்தார் 

லொஹான் ரத்வத்த:அனுராதபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட்டு கொலை அச்சுறுத்தல் விடுத்து இருந்தார் . அதே போல கண்டியில் 2001 பொதுத் தேர்தலின் போது நிராயுதபாணியாக இருந்த பத்து முஸ்லிம்களைக் கொன்ற சிங்கள கும்பல் ஒன்றுக்கு தலைமை தாங்கி  இருந்தார் 

சனத் நிஷாந்த:மே 9 ஆம் திகதியன்று  காலி முகதிடல் கோட்டா கோ கம போராட்ட காரர்கள் மீது மோசமான வன்முறையை ஏவிவிட்ட  கும்பலை வழிநடத்தியவர்களில்  ஒருவராக அடையாளம் காணப்பட்டு இருந்தார் 

 அனுராத ஜயரத்ன : பிரபல போதைப்பொருள் வியாபாரிகளுடன் நெருக்கிய தொடர்பு மற்றும்  கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபட்ட குற்றசாட்டை எதிர்கொண்டு இருந்தார் 

 எஸ்.வியாழேந்திரன் :மட்டக்களப்பில் நடைபெறுகின்ற சட்டவிரோத மணல் வியாபாரத்துடன் தொடர்பு பட்டு இருப்பதுடன் அவரின் சகோதரர் 1.5 மில்லியன் ரூபா லஞ்சம் பெறுகின்ற போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டு இருந்தார் 

 பிரசன்ன ரணவீர : சட்டவிரோத ஆவணங்கள் மூலம் 80 பேர்ச் அரச  காணியை சொந்தமாக்கி கொண்ட  மோசடியுடன் தொடர்புடையவர் . கடந்த காலங்களில் பாராளமன்ற அமர்வுகளில் வன்முறையை தூண்டியவர்களில் ஒருவராக அடையாளம்  காணப்பட்டு இருந்தார் 

ஷசீந்திர ராஜபக்சே : தடைசெய்யப்பட்ட சீனா உர கப்பலுக்கு  6.7 மில்லியன் டொலர்கள் அரச பணத்தை செலுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் 

திருமதி டயானா கமகே : தடை செய்யப்பட்ட போதை வியாபாரத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க கோரிய சர்சைகளில் தொடர்புபட்டு இருந்தார் 

சாமர சம்பத் தசநாயக்க :ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது கோடிக்கணக்கான நிதி மோசடியுடன் தொடர்புபட்டு இருந்தது தொடர்பான குற்றசாட்டுகளை எதிர்கொண்டு இருந்தார் அதே போன்று ஊவா மாகாணத்தில் ஆசிரியர் ஒருவரை முழந்தாளிட்டு அச்சறுத்திய குற்றசாட்டை எதிர்கொண்டு இருந்தார் 

பிள்ளையான்  :கொலை , கடத்தல் , கற்பழிப்பு உட்பட கிரிமினல் குற்றங்கள் மட்டுமின்றி முதலமைச்சராக இருந்த போது பூதூர் வங்கி கொள்ளை மற்றும் சட்டவிரோதமாக வீடு கைமாற்றால்  போன்ற பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புபட்டு இருந்தான்.

இராஜாங்க அமைச்சரவை விபரம்

1. ஜகத் புஷ்பகுமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

2. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்

3. லசந்த அலகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

4. திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

5. கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்

6. ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்

7. ஷெஹான் சேமசிங்க – நிதி இராஜாங்க அமைச்சர்

8. மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்

9. தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

10. பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

11. ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்

12. அருந்திக பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

13. விஜித பேருகொட – பிரிவென கல்வி இராஜாங்க அமைச்சர்

14. லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

15. தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

16. இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்

17. சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

18. சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்

19. சாந்த பண்டார – ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர்

20. அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்

21. சதாசிவம் வியாழேந்திரன் – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

22. சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்

23. பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்

24. பிரசன்ன ரனவீர – சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர்

25. டி.வி.சானக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர்

26. டி.பி.ஹேரத் – கால்நடை அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர்

27. சஷீந்திர ராஜபக்ச – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

28. சீதா ஆரம்பேபொல – சுகாதார இராஜாங்க அமைச்சர்

29. காதர் மஸ்தான் – கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

30. அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

31. அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்

32. கீதா குமாரசிங்க – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்

33. சிவநேசதுரை சந்திரகாந்தன் – கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

34. சுரேன் ராகவன் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

35. டயானா கமகே – சுற்றுலா இராஜாங்க அமைச்சர்

36. சாமர தசநாயக்க – முதன்மை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

37.அனுப பஸ்குவல் – சமூக அதிகார இராஜாங்க அமைச்சர்  





No comments