இலங்கை நடிகை தமிதா விளக்கமறியலில்!இலங்கை நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான், இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது, ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு எதிராகவும் நேற்று (07) நடத்தப்பட்ட கண்டன சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.

அவரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (08) ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

No comments