நல்லூரில் சண்டை வேண்டாம்!நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபியில்  நினைவேந்தலின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இருபிரிவினரிடையே இடம் பெற்ற மோதல்கள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

நினைவேந்தல் நிகழ்வுகளில் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம் என அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் மாவீரர் அறிவிலியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் கோரிக்கை விடுத்துள்ளாhர்.

இதனிடையே அஞ்சலிப்பதில்   அரசியலை கலக்காதீர்கள்.தங்களுடைய அரசியலை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி வி கே சிவஞானமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே உலகின் பல இடங்களில் நினைவேந்தல்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு கொண்டிருக்கும் இன்றைய நாளில், தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த் புனித மண்ணில் இன்று அரங்கேறிய சில விரும்பத்தகாத செயல்கள் மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது


No comments