மகிழுந்து விபத்தில் உயிர் தப்பினார் உக்ரைன் அதிபர்


உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தலைநகர் கீவில் நேரிட்ட வாகன விபத்தில் சிக்கியதாக செய்தி வெளியாகி உள்ளது.

ஜெலென்ஸ்கி சென்ற மகிழுந்து மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து நடைபெற்றதாக அவரது செய்தித் தொடர்பாளர் செர்ஜி நிகிஃபோரோவ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது வாகனம் போர்க்களத்திற்கு பயணம் செய்த பின்னர் வியாழக்கிழமை அதிகாலை மற்றொரு வாகனத்துடன் மோதியது.

மருத்துவர்கள் பரிசோதித்ததில்  ஜெலென்ஸ்கிக்கு பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை எனவும், விபத்து குறித்து விசாரிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்

No comments