சீன உரம்:ராஜபக்சக்களிற்கு தலையிடி!சீனாவில் இருந்து உரத்தை இறக்குமதி செய்து நாட்டுக்கு அறுபத்து ஒன்பது இலட்சம் டொலர்கள் நட்டம் ஏற்படுத்தியமைக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவே பொறுப்பு என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு நட்டத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு ஆனால் ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருக்கும் அச்சம் காரணமாகவே குறித்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments