யாழ்.மாநகர ஆணையாளரை தூக்குக?



யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு யப்பான் தூதரகம் வழங்க இணங்கிய வாகனம் தொடர்பில் விலகுவதாக அறிவித்த மாநகர ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு பாவித்த 4 கொம்பக்ரர் வாகனங்களை வழங்க யப்பான் தூதரகம் 2019 ஆம் ஆண்டு இணக்கம் தெரிவித்து அதற்கான ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொண்டனர். 

இதற்கமைய வாகனங்களை இலவசமாக வழங்கும் யப்பான் தூதரகம் அதனை இலங்கை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான செலவு மற்றும் சுங்கத் தீர்வையாகியவற்றை யாழ்ப்பாணம் மாநகர சபை சார்பில் செலுத்துவதற்காக ஒரு கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 466 ரூபாவினையும் யப்பான் தூதரகம் மாநகர சபையிடம் வழங்கியிருந்தனர். 

இருந்தபோதும் இலங்கை அரச திணைக்கள அனுமதி பெறுவதில் இருந்த தடைகள் காரணமாக இதுவரை வாகனங்கள் தருவிக்கப்படவில்லை. இதன்போதே மாநகர ஆணையாளர் கடந்த 2022-05-05 அன்று யாழ். மாநகர ஆணையாளர் யப்பான் தூதரகத்திற்கு எழுதிய கடிதத்தில் இத்திட்டத்தில் இருந்த விலக தீர்மானித்முள்ளதனால் நிதியை மீளப் பெறுமாறு கடிதம் எழுதியிருந்தார். 

ஆணையாளரின் கடிதம் சார்பில் யப்பான் தூதரகம் திட்டத்தை இரத்து செய்வதாக குறிப்பிட்டதோடு வழங்கிய நிதியினையும. மீளக் கோரியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவைச் சந்தித்த ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி அமைச்சர் என்ற வகையில் இதற்கான அனுமதிக்கான ஏற்பாட்டினை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

யப்பான் தூதரக அதிகாரிகளுடன் மீளப் பேசி அவர்களின் ஒப்புதலை பெற முடியுமா என அறிந்து கூறினால் நிதி அமைச்சர் என்ற வகையில் அதன் கீழ் உள்ள திணைக்களங்களுடன் பேசி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என ஜனாதிபதி பதிலளித்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையிலேயே மாநகர ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments