பிரான்ஸ் செல்ல முற்பட்ட 47 பேர் கைது!


சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ்க்கு செல்ல முற்பட்ட சுமார் 47 பேர் வென்னப்புவ - கொலிஞ்சாடிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று சிற்றூர்திகளில் பயணித்த போதே இவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 வயதுக்கு மேற்பட்ட 37 ஆண்கள் மற்றும் 06 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 04 நபர்கள் உள்ளடங்குகின்றனர். இந்த சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட 03 சிற்றூர்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, புத்தளம், சிலாபம், மாரவில, மஹாவெவ, முந்தலம மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

No comments