யாழில் முன்னெடுக்கப்பட்ட ஈருறுளிப் பயணம்! பலரும் பங்கேற்பு!


யாழ்ப்பாணத்தில் ஆரோக்கியத்தின் பாதை என்ற தொனிப்பொருளிலில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஈருறுளிப் பயணம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் யாழ்ப்பாண மருத்துவபீடத்திலிருந்து ஆரம்மான ஈருறுளிப் பயணம், ஆடியபாதம் வீதி வழியாகக் கொக்குவில் சந்தி வந்தடைந்து.

பின்னர் கே.கே.எஸ் வீதி வழியாக ஆஸ்பத்திரி வீதியை அடைந்து, அவ் வீதி வழியாக வேம்படிச் சந்தியை வந்தடைந்தது. 

அங்கிருந்து பலாலி வீதி ஊடாகப் பரமேஸ்வராச் சந்தியை அடைந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வளாகத்தின் நுழைவாயிலில் நிறைவடைந்தது.

ஒரு மணிநேரம் நடைபெற்ற ஈருறுளிப்பயணம் அண்ணளவாக 10 கிலோ மீற்றர் தூரம் நடைபெற்றது.

விழிப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா, மருத்துவபீட பீடாதிபதி   இ.சுரேந்திரகுமாரன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், யாழ் போதனா வைத்திசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன், பல்கலைக்கழகப் பணியாளர்கள், மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



No comments