யாழிற்கு புகையிரதத்தில் உணவு?யாழ்ப்பாணத்துக்கான இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன அவர்கள் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பயணமொன்றை "யாழ் ராணி" புகையிரத்தில் மேற்கொண்டுள்ளார்.

இவ்விஜயத்தின்போது யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள், போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதன்போது, யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்குரிய திட்ட முன்மொழிவுகள் புகையிரத திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதனடிப்படையில் இந்த சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம் என தெரிவித்தார்.

No comments