பயமுறுத்தி அடி பணிய வைக்கமுடியாது:ஜேவிபிகாலிமுகத்தில் போராட்டத்தில் முக்கிய பங்கையாற்றியதாக நம்பப்படும் ஜேவிபி மீண்டும் ரணிலுக்கு எதிராக பொர்க்கொடி தூக்கியுள்ளது

 "ஒரு நாட்டை பயமுறுத்தி ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கலைத்து புதிய ஆணையை அனுமதிக்குமாறு வலியுறுத்தி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இன்று நம் நாட்டில் மக்கள் ஆணை இல்லாத அரசு, ஆணை இல்லாத தலைவர் கட்டியெழுப்பப்பட்டதை நாம் அறிவோம். மேலும் எந்த திட்டமும் தொலைநோக்கு பார்வையும் இல்லாத ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, இவர்கள் நமது நாட்டின் பொருளாதாரத்தை அழித்த குழுவாகும். எனவே, அந்த ஆட்சியை அகற்ற முன்வருவதற்கு இந்நாட்டு மக்களுக்கு நியாயமான உரிமை உள்ளது.

சமீப காலங்களில், நம் அனைவருக்கும் உத்வேகத்தையும் தூண்டுதலையும் கொண்டு வந்த மாபெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கும் மக்கள் ஆட்சிக்காக நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள் குழுக்கள் வீதியில் இறங்கி போராடினர். கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில், இலங்கையில் அண்மைக்கால வரலாற்றில் மிகப்பெரிய மக்கள் அணிதிரட்டலைக் கண்டோம். அந்தப் போராட்டம் ராஜபக்சே முகாமை அகற்றுவதில் வெற்றி பெற்றது. ஆனால் எஞ்சியிருந்த ராஜபக்சே முகாம் புதிய தலையை நிறுவியிருக்கிறது .

இப்போது அடுத்த வாரம் நிறைய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். கூடுதல் பதவிகளை வழங்கி மக்களின் கோடிக்கணக்கான பணத்தை வீணடிப்பதில் மும்முரமாகவுள்ளனர் . பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருவரே இருந்தார். கடந்த பாராளுமன்றத்திற்கு போட்டியிட்ட அனைவரும் தோற்றனர். இப்போது தோல்வியடைந்தவர்கள் முகாமில் உள்ளனர். தனக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ரணில் ஆசி வழங்கி வருகிறார்.

வரலாறு முடிந்து விட்டது ரணில், இப்போது பல தசாப்தங்கள் கடந்துவிட்டன. நாட்டை பயமுறுத்தி, பயமுறுத்தி, சமூக ஆர்வலர்களை அடக்கி, அரசியல் ஆர்வலர்களை அடக்கி, கதிரையை ரணில் விக்கிரமசிங்க பாதுகாக்க முடியுமா? அதுதான் வரலாறு.” தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments