இலங்கையில் பொருளாதார நெருக்கடி:லஞ்சம் அதிகரிக்கிறது!



இலங்கையில் பொருளாதார பணவீக்க நிலைமை காரணமாக நாடளாவிய ரீதியில் இலஞ்ச ஊழல் வழக்குகள் அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே  இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல்வேறு தரத்தில் உள்ள 80 அரசியல்வாதிகள் உட்பட 386 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, சட்டவிரோதமாக சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஒருவர் உட்பட நாற்பத்திரண்டு பேருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் ஞாயிறு சிங்கள இதழ் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் தெரிவித்துள்ளார்.


இந்த விசாரணைகள் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இதே காலப்பகுதியில் இலஞ்சம் தொடர்பான 22 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு இந்த வருடத்தில் சட்ட விரோதமாக சொத்துக்களை சம்பாதித்தமை தொடர்பில் பல வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



No comments