வடமராட்சியில் இரு மரணங்கள்



வடமராட்சி முள்ளிப் பகுதியில் மணல் ஏற்றிவந்த கன்ரர் விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் வடமராட்சி முள்ளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த தேசிங்கன் ஜெயந்தன் ( வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அனுமதியற்ற மணலை ஏற்றிவந்த கன்ரர் வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்ட நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது

இதனிடையே  வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.

மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

தொண்டைமானாறு வல்லை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி (வயது-75) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். கனடாவிலிருந்து வருகை தந்திருந்த குறித்த நபர் குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை காணாமற்போயிருந்தார்.

சடலம் உருக்குலைந்து காணப்படுவதனால் அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

No comments