யாழில் சிகையலங்கரிப்பு நிலையத்தினுள் வாள் வெட்டு


யாழ்ப்பாணம்  மல்லாகம் பகுதியிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை (09) மாலை வாள்வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குள் நுழைந்த வன்முறைக் கும்பலொன்று நடாத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments