காரைநகர் எரிபொருள் நிலையத்தில் குழப்பம்: வீட்டுக்குத் தீ வைப்பு: இருவர் கைது!


யாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளினை காட்டி பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்பங்களை ஏற்படுத்திய குற்றத்தில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.  

இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் உறவினரும், சம்பவம் நடக்கும் போது அவ்விடத்தில் நின்றவருமான ராசலிங்கம் பொன்னம்பலம் என்பவரின் வீட்டுக்கு இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. 

வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் தீ வைப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

No comments