நாடு திரும்பும் கோட்டாவுக்கு கொமாண்டோ பாதுகாப்பு!!


இலங்கைக்கு மீண்டும் வரவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு இராணுவகொமாண்டோக்களின் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மிகவும் முக்கிய இலக்காக கோத்தபாய ராஜபக்ச காணப்படுவதால் அவருக்கு இராணுவ கொமாண்டோ பாதுகாப்பு வழங்கப்படும்.

24 ம் திகதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை வருதாக தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் பாதுகாப்பு காரணங்களிற்காக அவர் இலங்கைக்கு திரும்பி வரும் திகதியில் மாற்றங்கள் செய்யப்படலாம்.

முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்தின் வீடொன்றை கோரமாட்டார் அவர் மிரிஹானவில் உள்ள வீட்டிலேயே வசிப்பார் என அவரின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி தற்போது பாங்கொங்கின் ஆடம்பர ஹோட்டலிற்குள் முடங்கியநிலையில் காணப்படுகின்றார்.அவருக்கு பாதுகாப்பு வழங்கும் விசேட பாதுகாப்பு தரப்பினர்  அவர் ஹோட்டலை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.

பல நாடுகளில் புகலிடம் பெறுவதற்கான அவரின் கோரிக்கைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே  அவர் நாடு திரும்புகின்றார்.

No comments