வவுனியாவில் விபத்து! இளைஞன் பலி!


வவுனியாவில் பாரவூர்தியுடன் உந்துருளி நேருக்கு நேர் மோதியதில் ஒரு உயிரிழந்தார்.

இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை 12.30 மணியளவில் நடந்தது.

ஏ9 நெடுஞ்சாலை ஊடாக கொழும்பு நோக்கி கால்நடைகளைச் ஏற்றிச் சென்ற பாரவூர்தியுடன் எதிர் திசையில் வந்த உந்துருளி மோதியது. 

இவ்விபத்தில் உந்துருளியில் பயணித்த 22 வயதுடைய ஆனந்தகுமார் கேதீஸ்வரன் என்ற இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.  இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.


No comments