மீனவர்களின் தகவல்கள் திரட்டு!


காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மீன்பிடித் தொழில் சம்பந்தமான மீனவர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கை, நேற்று புதன்கிழமை (24) நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் கூகுள் படிவத்தின் ஊடாக இந்தத் தகவல் திரட்டும் நடவடிக்கை இடம்பெற்றது.

இதன் முதல் நடவடிக்கையாக காத்தான்குடி கடலில் மீன்படி தொழிலில் ஈடுபட்டு வரும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதரின் தலைமையில் நடைபெற்ற இந்தத் தகவல் திரட்டும் நடவடிக்கையில் குறித்த பகுதியின் கிராம உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், காத்தான்குடி நகர சபை ஊழியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டனர்.

இதன்போது மீனவர்களின் விவரங்கள், அவர்களின் மீன்பிடி வாடிகள் உட்பட பல்வேறு தகவல்கள் திரடப்பட்டதுடன், அவர்களின் மீன்பிடி வாடிகளுக்கு இலக்கங்களும் வழங்கப்பட்டன.

No comments