தேங்காய்க்கு தட்டுப்பாடு?இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கு தென்னை அபிவிருத்தி அதிகார சபையே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களில் 2 மில்லியன் தேங்காய்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதால் எதிர்காலத்தில் சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலப்பகுதி இலங்கையில் தேங்காய் உற்பத்தி குறைந்த காலப்பகுதியாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தேங்காய்களை ஏற்றுமதி செய்வதால் எதிர்காலத்தில் சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments