யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் போராட்டம்


சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள UNHCR அலுவலகம் முன்பாக இன்று 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments