கோத்தாவை பாதுகாக்க ரணிலிடம் கோரிக்கை!

 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு தேவையான பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகளை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.


No comments