கல்வி அமைச்சரை கைவிட்டோடிய டக்ளஸ்!யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் தொழில்நுட்ப பீடத்தின் திறப்பு விழாவிற்கு இலங்கை கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த வருகை தரவிருந்த நிலையில் பெரும்பான்மையின மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை அவருக்கு எதிராக நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த பல்கலைக்கழகத்திற்கு செல்வதை கைவிட்டுள்ளார்.

இந்நிலையில் கட்டிடத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டித் திறந்து வைத்திருந்தார்.

எனினும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் டக்ளஸினது வருகையினை பொருட்டாக கருதியிருக்கவில்லை.

அரைகுறையாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை அவசர அவசரமாக திறந்து வைக்க காரணமென்ன என கேள்வி எழுந்த நிலையிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சி பல்கலைக்கழகத்திற்கான விஜயத்தை கைவிட்டுள்ளார்.

எனினும் கிளிநொச்சியிலும்,யாழ்ப்பாணத்திலும் மாவட்ட மட்ட கூட்டங்களில் கல்வி அமைச்சர் பங்கெடுத்திருந்தார்.
No comments