டுபாயிலிருந்து இலங்கைக்கு 3.1 கிலோ தங்கம் மற்றும் 39 ஐபோன்கள் கடத்தியவர்கள் கைது!


டுபாயிலிருந்து நாடு திரும்பிய 3.1 கிலோ தங்க நகைகள் மற்றும் 39 ஐபோன்களுடன் சுங்க வரி செலுத்தாமல் கடத்திச் செல்ல முயன்ற 6 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

UL 226 விமானத்தில் நாட்டிற்கு வந்த இரண்டு பெண்கள் உட்பட பயணிகள் சுங்கப் பகுதியைக் கடந்து வருகை முனையத்திலிருந்து வெளியே வந்தபோது சி.ஜ.டி அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சோதனையின் போது, ​​அவர்கள் உடலில் நகைகளாக அணிந்திருந்த தங்கத்தையும் மற்றும் சாமான்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தக்கத்தையும் அதிகாரிகள் மீட்டனர். அத்துடன் அவர்களது பயணப் பைகளில் இருந்து 39 ஐபோன்களையும் காவல்துறையினர் மீட்டனர்.

45, 48, 50 மற்றும் 51 வயதுடைய நான்கு சந்தேகநபர்களும் அக்குறணையைச் சேர்ந்தவர்கள் மற்றும் 40 மற்றும் 41 வயதுடைய நீர்கொழும்பு மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு பெண்களும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

No comments