முல்லைத்தீவில் எரிபொருள் பதுக்கியவர் கைது


முல்லைத்தீவு செம்மலை பகுதியில் நேற்று (11)  வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த நபரைக் கைது செய்தவுடன் எரிபொருட்களையும் காவல்துறையினர்  மீட்டுள்ளார்கள்.

வீட்டில் இருந்த 45 லீற்றர் டீசல், 21 லீற்றர் பெற்றோல் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன. இதன்போது 50 வயதுடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு காவல்நிலையத்தில் குறித்த நபர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments