புலிகளற்ற இலங்கை:இந்தியாவிற்கு தலையிடி!இந்தியாவிற்கு அல்வா வழங்க வருகை தரவுள்ள சீனக்கப்பலிற்கு முன்னதாக சீன தயாரிப்பு பாகிஸ்தானிய கப்பல் வந்தடைந்துள்ளது

சீனாவில் கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தானின் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான தைமூர் (PNS Taimur) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில் பயணித்துள்ளது.

இந்த போர்க்கப்பல் கம்போடிய மற்றும் மலேசிய கடற்படைகளுடன் பயிற்சிகளை நடத்திய நிலையிலேயே கராச்சி திரும்புகிறது. 

கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்குச் செல்லும் வழியில் கொழும்பு  துறைமுக அழைப்பை ஏற்று, பாகிஸ்தானின் இந்த ஏவுகணைப் போர்க்கப்பல், இலங்கை வந்துள்ளது.

இந்த கப்பல் எதிர்வரும் 12-15 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments