இன்று அதிகாலையும் 8 பேர்?இலங்கையில் இருந்து உயிர் பிழைக்கும நோக்கில்  இந்தியாவிற்கு இன்று அதிகாலையும்  8 பேர் தப்பிச் சென்றனர்.

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில்  இருந்து தமிழகம் நோக்கி படகில் ஏற்றிச் செல்லப்பட்ட 8பேரை  இலங்கை படகு தனுஸ்கோடியில்  இறக்கி விட்டுத் திரும்ப்பிய நிலையிலேயே 8 பேரையும் தமிழக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரில் 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் அடங்குகின்றனர். இதேநேரம் நேற்றைய தினமும் எண்மர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments