அலுவல் முடிந்து புறப்படுகின்றது:யுவான் வாங்


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 இன்று மாலை 4 மணிக்கு புறப்படும் என ஹம்பாந்தோட்டை துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யுவான் வாங் 5 என்பது சீனாவின் சமீபத்திய தலைமுறை ஆய்வுக் கப்பலானது,கடந்த 16 ஆம் திகதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிரப்பும் நோக்கத்தில் உத்தியோகபூர்வமாக நுழைந்தது.

யுவான் வாங் 5 என்ற உயர் தொழில்நுட்ப சீன கண்காணிப்பு கப்பலுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments