அனைவரும் ஒன்றிணைய கோருகின்றது டெலோ!



சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ளனர். 

இதனிடையே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாயிரம் நாட்களை கடந்துள்ள நிலையில், இன்று வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடிக் கொண்டிருக்கும் அனைத்து அமைப்புகளும் ஒருமித்து செயலாற்ற வேண்டும் என உபதேசம் செய்துள்ளது டெலோ அமைப்பு.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் நிலை, அவர்களுடைய  மனப்பாங்கு, அவர்கள் படுகின்ற துன்பம், அதனால் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் என பல விடயங்களை வரிசைப்படுத்தி சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் செயலாற்றி வருகின்றன.  குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டவர்கள் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்றே கருத்தப் படுகிறார்கள் 

 காணாமல் ஆக்கப்பட்டவர்களை அரசாங்கங்கள் பொது நிறுவனங்கள் தேடி கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல், அதற்கான பொறிமுறைகளை வகுத்தல்,  அவர்களுடைய நிலையை கண்டறிதல், அதற்கான குடும்பங்களுக்கு அதற்கான பரிகார நீதியை பெற்றுக்கொடுத்தல், காணாமல் ஆகும் அல்லது ஆக்கும் நிலைமைகளை இல்லாதொழித்தல், அதற்கான சட்டங்களை இயற்றுதல், மக்களுக்கு பாதுகாப்பினை ஏற்படுத்துதல் என்ற பல குறிக்கோள்களை கொண்டு காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை சர்வதேச ரீதியாh நாடுகளும் அமைப்புக்களும் அனுஷ்டித்து வருகின்றனர். 

 குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்ட அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் வரிசையில் காணப்படுகிறார்கள். அவர்களின் உறவுகள் இடைவிடாது தமது நீதிக்காக போராடி வருகிறார்கள். ஒட்டுமொத்த இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர்  எண்ணிக்கை  ஒரு சில லட்சங்களை தாண்டுகிறது. 

  ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயலணி 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் உலகத்திலேயே காணாமல் ஆக்கப்பட்டோர் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. 

 இந்தநிலையில் இலங்கை அரசாங்கங்கள் ஜனநாயகத்தை நிலை

 நிறுத்துவதாக உலகத்துக்கு பறைசாற்றி வருவது கவலைக்குரிய விடயமே.  காணாமல் ஆக்கப்பட்டோர் கான நீதி மற்றும் அதற்கான பொறிமுறையை சர்வதேச நாடுகளின் உதவியுடன் மேற் பார்வையுடன் உருவாக்கி செயல்படுத்துவதே இந்த நாளில் காணாமல் ஆக்கப்பட்டோருகான இதயபூர்வமான பணியாக இருக்கும். 

 இலங்கையில் இன்று காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடிக் கொண்டிருக்கும் அனைத்து அமைப்புகளும் இதற்கான இறுதி இலக்கை எட்டுவதற்கு ஒருமித்து செயலாற்றுவது அவசியமாகிறது. அதற்காக இந்நாளில் அனைவரும் உறுதி பூண வேண்டும் என டெலோ அழைப்புவிடுத்துள்ளது.


No comments