அனுசரித்து செல்ல ஆளுநர்களிற்கு பணிப்பு!வடமாகாண சபையின் செலவுகளை நிர்வகிக்கும் பொறுப்பும், மாகாண நிர்வாகம் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒழுங்கான முறையில் பேணும் பொறுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளில் மாகாண ஆளுநர்கள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி அலுவலகத்துடனும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியால் ஆளுநர்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


No comments