அப்பாடி!தாய்லாந்தில் தரை இறங்கினார் சேர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக இன்று (11) பேங்கொக் வந்தடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை சிங்கப்பூரின் செலிடார் விமான நிலையத்திலிருந்து வாடகை விமானம் மூலம் பேங்கொக் நேரப்படி இரவு 8 மணியளவில் பேங்கொக்கின் டான் முயாங் விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.No comments