முட்டை பதுக்கல்:அடுத்து இறைச்சியாம்?



இலங்கை அரசு முட்டைக்கான விலையினை நிர்ணயித்து அறிவித்துள்ள நிலையில் முட்டை சந்தையில் இல்லாது பதுக்கப்பட்டுள்ளது.

கோழிக்கறி மற்றும் மீனின் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சந்தையில் கோழி இறைச்சியின் விலை மற்றும் அதற்கான விலை தொடர்பான தரவுகள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீமெந்து, கம்பி மற்றும் இரும்பு ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

No comments