கொவிட் தடுப்பூசி தாயாரிப்பு: நகலெடுத்த விவகாரம் பைசர் மற்றும் பயோடெக் மீது வழக்குத் தொடுத்தது மாடர்னா?


அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் கோவிட்- 19 தடுப்பூசியை உருவாக்குவதற்கான காப்புரிமையை மீறியதை மேற்கோள் காட்டி, தடுப்பூசி தயாரிப்பாளரான ஃபைசர் மற்றும் அதன் யேர்மனி பங்காளியான பயோஎன்டெக் மீது வழக்குத் தொடுப்பதாக மாடர்னா கூறியுள்ளது.

நோய்க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய கருவியாக இருக்கும் கோவிட்-19 தடுப்பூசி முன்னணி உற்பத்தியாளர்களுக்கு இடையே இந்த வழக்குகள் பதியப்பட்டது.

மாடர்னாவின் அடிப்படையான எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மாடர்னா 2010 மற்றும் 2016 க்கு இடையில் தாக்கல் செய்த காப்புரிமையை ஃபைசர் மற்றும் பயோஎன்டெக்கின் கோவிட்-19 தடுப்பூசி கொமிர்னாட்டி (Comirnaty) மீறுகிறது என்று மாடர்னா நம்புகிறது என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட பயோடெக் நிறுவனம்  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பைசர் மற்றும் பயோடெக் இந்த தொழில்நுட்பத்தை, மாடர்னாவின் அனுமதியின்றி, கொமிர்னாட்டி Comirnaty ஐ உருவாக்க நகலெடுத்தன என்று மாடர்னா கூறிகிறது.


No comments