சுமா பிரதமர்: சி.வி வாழ்த்து!

ஏம்.ஏ.சுமந்திரனை இடைக்கால அரசின் பிரதமராக நியமிப்பது தொடர்பில் கொழும்பில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் எம்.ஏ.சுமந்திரனை பிரதமராக நியமிப்பதாக இருந்தால் உண்மையிலேயே நான் சந்தோசம் அடைவேன் என சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

''மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உத்தியோகபூர்வமல்லாத வகையில் சுமந்திரனை பிரதமராக நியமிக்கலாம் என்று அணுகிய நிலையில் அதை எல்லா கட்சிகளும் இணைந்து அழைத்தால் தான் அந்த பதவியை ஏற்க முடியும் என கருத்து தெரிவித்திருந்தார். இதை சுமந்திரனிற்கு தெரிந்த ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.” சுமந்திரனை பிரதமராக நியமிப்பதென்றால் உண்மையிலேயே நான் சந்தோசம் அடைவேன். ஏனென்றால் அவர் என்னுடைய மாணவர். பல வருட காலமாக தெரிந்தவர் என்ற வகையில் அதற்கு நான் எதிர்ப்பு அல்ல.

இது பற்றி இணைய வழிக் கலந்துரையாடலில் கூறியதன் காரணமாக இன்று அது பரகசியமாகியுள்ளது. ஆனால் சில விடயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும். அவர் தன்னுடைய கட்சியினுடைய ஏகோபித்த விருப்பிலா அல்லது தன்னுடைய தனிப்பட்ட விருப்பில் ஏற்றுக் கொள்வதா என்பது ஒரு கேள்வியாகும்.

தமிழர்கள் அமைச்சுப் பதவியை ஏற்றதன் பிற்பாடு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால், தாங்கள் என்ன காரணத்துக்காக நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்பட்டார்கள் என்பதை மறக்க வேண்டிய நிலை ஏற்படும். காரணம் எந்த நேரமும் மத்திய அரசுடன் இணைந்து வேலையைச் செய்யும்போது மத்திய அரசாங்கத்தினுடைய விருப்பு தாக்கம் செலுத்துவதால் தமிழ் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை மறந்து விடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.நான் நினைக்கின்றேன் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏற்றதன் பின்னர் அமிர்தலிங்கம் அவர்களின் வாழ்வில் பல முரண்பாடுகள் ஏற்பட்டது. இரா.சம்பந்தனும் அதே போலவே எதிர்கொண்டார்.

ஏம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு பதவி ஏற்றுக்கொள்வதானால் தமிழ் கட்சிகள் அனைவரினதும் ஏகோபித்த விருப்பை பெற்றுக்கொண்டால் நல்லது என நினைக்கின்றேன் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments