பாவாடையில் கோத்தாவின் வெற்றி விருது!



இலங்கையினுள் பதுங்கி வாழும் கோத்தபாய மீண்டும் மெரிக்க திரும்புவது உறுதியாகிற்று.

முன்னதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கோத்தா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்திருந்த  போதும் அவர் இலங்கை இந்திய கடல் எல்லையில் இந்திய கண்காணிப்பின் கீழ் வாழ்ந்தமை உறுதியாகிற்று.

இந்நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிலேயே உள்ளார் இன்று காலை முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார் என தெரியவருவதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.



9ம் திகதி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இலங்கையின் கடற்பரப்பிற்குள் கடற்படை கலத்தில் தங்கியிருந்த ஜனாதிபதி இன்றுநாடு திரும்பியுள்ளார் முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார்.

13ம் திகதி பதவியை இராஜினாமா செய்யவுள்ள ஜனாதிபதி பின்னர் வெளிநாட்டிற்கு செல்லவுள்ளார்.

இதனிடையே கோத்தபாயவின் இராணுவ வெற்றி சின்னங்கள் பெண்களது உள்ளாடைளில் ஜனாதிபதி மாளிகையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

No comments